முரசொலி மாறன் தமிழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைமிகு அரசியல்வாதி ஆவார். நாடாளுமன்றத்தில், 36 வருடங்கள் எம்.பி ஆக பணியாற்றிய இவர், வி.ப். சிங் தலைமையிலான ஆட்சியில் ஊரக மேம்பாடு, கவுடா மற்றும் குஜ்ரால் தலைமையிலான ஆட்சியில் தொழிற்துறை, மற்றும் வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அரசியல் மட்டுமல்லாமல் அவர் ஒரு பத்திரிக்கையாளரும், திரைப்பட கதாசிரியரும் கூட.

முரசொலி மாறன் ஆகஸ்ட் 17, 1934ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பிற்கு பின்னர் பச்சையப்பா நினைவுக் கல்லூரியில் எம்.ஏ பட்டம் பெற்றார். அரசியலில் குதிக்கும் முன்னர் பத்திரிக்கையாளராகவும், சமூக சேவகராகவும் இவர் அறியப்பட்டார். அவர் சென்னையில் படிக்கும்பொழுதே திமுக வில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்பட்டார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அதை மும்முரமாக எதிர்த்த திரு. மாறன் அவர் எழுதிய கட்டுரைக்காக ஒரு வருடம் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாறன் அவர்களின் மிக முக்கிய வெற்றியானது தோஹா மாநாட்டில் அனைத்து வளரும் நாடுகளையும் G7 நாடுகள் உலக வங்கியின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு எதிராக திரட்டியது ஆகும். உலக வங்கியின் திட்டங்கள் வளர்ந்த நாடுகளுக்கு மேலும் வளமும், வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் இருந்ததே அதற்கு காரணம். பல வழிகளிலும் நாடுகளை ஒன்று திரட்டி வளர்ந்த நாடுகளின் திட்டத்தை முறியடித்தவர் திரு. முரசொலி மாறன் அவர்கள்.

வகித்த பதவிகள்

லோக்சபா தேர்தலில் தேர்வு1967
லோக்சபா தேர்தலில் மீண்டும் தேர்வு1971
உறுப்பினர் - பொதுப் பணித்துறை 1980-1982

உறுப்பினர், பொது கணக்கு கமிட்டி

உறுப்பினர்1982-1983

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை

உறுப்பினர் 1987-1988

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை.

உறுப்பினர் 1988-1989

துணைச் சட்டத்தின் மீதான குழு

மத்திய அமைச்சர்1989-1990

ஊரக மேம்பாட்டுத்துறை

உறுப்பினர் 1992-1993

பத்திரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டு பாராளுமன்றக் குழு

மத்திய அமைச்சர்1996-1998

தொழிற்துறை

பாராளுமன்ற உறுப்பினர்1998

நான்காவது முறையாக லோக் சபாவுக்கு (பன்னிரெண்டு) தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர்1999

ஐந்தாவது முறையாக லோக் சபாவுக்கு (பதிமூன்று) தேர்ந்தெடுக்கப்பட்டார்

மத்திய அமைச்சர்1999-2002

தொழிற்துறை

ஒரு பத்திரிக்கையாளராகவும் ஜொலித்த திரு. முரசொலி மாறன், முரசொலி மற்றும் ரைசிங் சன் தினசரிகளுக்கு ஆசிரியராக பணியாற்றினார். மேலும் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் சுமங்கலி போன்ற இதழ்களையும் பதிப்பித்தார். சிறந்த கதாசிரியராகவும் விளங்கிய அவர், இருபதிற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஐந்து படங்களை தயாரித்தும், இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

1975ல் சங்கீத் நாடக் அகாதெமி திரு. மாறன் அவர்களுக்கு கலைமாமணி பட்டம் அளித்து கவுரப்படுத்தியது. மூன்று படங்களுக்காக ஜனாதிபதி விருதும், தமிழக அரசு விருதும் பெற்றுள்ளார்.

தனது 69வது அகவையில் 23, நவம்பர் 2003ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாயி மற்றும் பல மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி பேதமின்றி பல அரசியல் தலைவர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாறனின் இழப்பைப் பொறுக்காத கலைஞர் கருணாநிதி தன் மனசாட்சி என்று கொண்டாடிய திரு. முரசொலி மாறனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது இருவர் மத்தியில் இருந்த அன்பை உலகிற்குச் சொன்னது.

காணொளிகள்